ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் துர்கை அம்மன் பாடல்கள் துர்க்கை பார்வதியின் ஆங்கார வடிவங்களில் ஒன்றாகத் திகழும் புகழ்பெற்ற தமிழ் தெய்வம் ஆகும். துர்க்கை என்றால் வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவல் என்று பொருள். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி என்றும் அழைக்கப்படுவதுண்டு. சிவபுராணத்தின்படி, படைப்பின் ஆரம்பத்தில், ஈசனின் இடப்பாகத்திலிருந்து துர்க்கை தோன்றியதாகவும், அவர்கள் உலகங்களையும் ஏனைய அரி-பிரமேந்திராதி தேவர்களைப் படைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. அந்நூலும் தேவி மான்மியம் எனும் இன்னொரு நூலும், அத்துர்க்கையானவள், இரம்பன் எனும் அசுரனின் மகனான மகிடாசுரனை அழிப்பதற்காக முத்தேவர்களின் உடலிலிருந்தும், ஏனைய தேவர்களிலிருந்தும் ஒளி வடிவில் மீண்டும் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது. துர்தரன், துன்முகன், புகைக்கணான் முதலான மகிடாசுரனின் படைத்தளபதிகளைக் கொன்று, இறுதியில் அவனையும் அன்னை வதைத்த கதை.விந்திய மலைத்தொடர், மற்றும் இமய மலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளின் போர்த்தெய்வமொன்றே, பிற்காலத்தில் துர்க்கையாக வளர்ச்சி பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. பாடல்:நவதுர்கையாக பாடியவர்:மகாநதி ஷோபனா இசை: கண்மணிராஜா பாடலை எழுதியவர்:தெள்ளாறு ஏ.மணி தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ, இயக்கம்:சிடி ராஜா Aarathi Audio Proudly presents tamil devotional bakthi songs. songs:Navadurgaiyaaga , sung by Mahanathi Shobana. music:Kanmaniraja, lyrics:Thellaru E.Mani, Produced by Aarathi Audio, direction:CD.RAJA
No comments:
Post a Comment