Monday, November 5, 2018

SANDANAMAM-IYYAPPAN SONGS

     அன்பான ஐயப்ப பக்தர்களுக்கு  ஆரத்தி ஆடியோவின்  ஐயன் அருளோடு வணக்கம் ஐயனின் விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்,பூஜையை எப்படி செய்யவேண்டும் என்று பாடல்களில் கூறிஉள்ளோம் ஐயனின் பெருமையை கூற நாங்கள் எடுத்த சிறு முயற்சியே இது.                                                             ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் ஐயப்பன் பிறந்தார்.
                குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும்,  பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.ராஜாவுக்கோ வயது ஆகிக் கொண்டு இருக்கிறது அதனால்    மந்திரி அழைத்து மணிகண்டனுக்கு பட்டம் சூட்டலாம் என்று இருக்கீறேன் என்று கூறினார். ஆனால் மந்திரி நேராக ராணியிடம் சென்று  மஹாராணி பெற்றமகனிருக்க வளர்த்தமகனுக்கு முடிசூட்ட நினைக்கீரர்  மஹாராஜா, உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ ஒருவன்  எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தார் மந்திரி. தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார். மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வர வேண்டுமானால் 48 நாட்கள் விரத மிருந்து இருமுடி ஏந்தி  அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன். இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.
                 தமிழகத்தின் பாரம்பரிய  இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை  கொண்டு பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும்  ஐயப்பன் பஜனை பாடல்கள்   இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள்  தவறு செய்தால் எவ்வாறு  மன்னிப்பீரோ அதேபோல் மன்னித்து பாடல்கள் & கதையை கேட்டு ஐயனின்  அருள் பெறுங்கள்

                                       சாமியோ சரணம் ஐயப்பா                                                                                                                       பாடல்: சந்தனமாம்
                                                        பாடியவர்:                                                                                                           U .செந்தில்குமார் பூசாரி &V.K.தேவநாதன் பூசாரி                                                           பம்பைசெந்தில் தேவநாதன் கலைக்குழு குறிஞ்சிபாடி                                                                           தயாரிப்பு:ஆரத்தி ஆடியோ                                                                                                                    இயக்கம்:சிடி.ராஜா                                                                                                                                                                                                            Aarathi Audio Proudly presents tamil devotional songs of iyyappan. tamil folk instrumental of pambai  udukkai and silambu.pambaisenthail&devanathan party,kurinjipadi                                                                                                                                                                                                                                                                                                  songs : Sandanamam                                                                                               sung by :U.SENTHILKUMAR POOSARI &V.K.DEVANATHAN POOSARI .                                                                Produced by Aarathi Audio,                                                                                                                               direction:CD.RAJA                                                                                                                           

No comments:

Post a Comment

  முத்துமாரி அம்மனுக்கு கூழ் வார்த்து, கும்பம் படைக்கும் திருவிழா | நெல்வாய் கிராமம் | திருவள்ளூர் | Aarathi Audio